அய்யோ பாவம் அதர்வா

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (15:31 IST)
அதர்வா நடித்துவந்த ‘ருக்குமணி வண்டி வருது’ படம், ட்ராப் செய்யப்பட்டுள்ளது.


 


படம் ஓடுகிறதோ, இல்லையோ… ஆனால், அதர்வாவுக்கு மட்டும் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், ராஷி கண்ணாவுடன் அதர்வா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’, அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்நிலையில், அதர்வா நடித்துவந்த ‘ருக்குமணி வண்டி வருது’ படம், ட்ராப் ஆகியுள்ளது.

ராஜாமோகன் இயக்கிவந்த இந்தப் படத்தில், பூஜா ஜாவேரி, எஸ்பிபி சரண், தம்பி ராமையா, ‘போஸ்டர்’ நந்தகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தில், 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆனால், மேற்கொண்டு இதுவரை படப்பிடிப்பு நடக்கவில்லையே என்று விசாரித்தபோது, படம் ட்ராப்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகலாம் என்று கனவு கண்டிருந்த பூஜா ஜாவேரி, தற்போது வேறு கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்