குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

vinoth

வியாழன், 15 மே 2025 (10:55 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழ் மொழித் தாண்டியும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார் ஆதிக்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா ‘குட் பேட் அக்லி’ படத்தைப் பார்த்துவிட்டு அவரை அழைத்துக் கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் பாலகிருஷ்ணா-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் ஒரு படம் பற்றிய அப்டேட் வரலாம் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்