அமீர்கானை நான் திருமணம் செய்யப் போகிறேனா? முதல் முறையாக மௌனம் கலைத்த நடிகை!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:19 IST)
தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துள்ள நடிகர் அமீர்கான் விரைவில் தங்கல் படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். இந்நிலையில் அமீர்கான் தன்னுடன் தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் என்கிற நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களின் காதலால்தான் அமீர்கானின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினை  உருவாகி  விவாகரத்து வரை சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுபற்றி அமீர்கான் மற்றும் பாத்திமா சனா ஷேக் ஆகிய இருவருமே எதுவும் பேசவில்லை. இந்நிலையில் இப்போது பாத்திமா தனது நெருக்கமானவர்களிடம் ‘ஊடகங்கள் இந்த செய்தி உண்மையா என்றுகூட தெரியாமல் எழுதுகின்றன. இதனால் ரசிகர்கள் என்னைத் தவறானவராக நினைக்கின்றனர். மக்கள் என்னைத் தவறாகக் கருதுவதை நான் விரும்பவில்லை’ என சொல்லி புலம்பியுள்ளாராம். இதனால் இந்த கல்யாண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்