இந்திய சினிமாவின் கிளாமர் குயினாக 80 களிலும் 90 களிலும் பிரபலமாக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் ஆரம்பித்த அவரின் திரைவாழ்வு, இந்திக்கு சென்ற பின்னர் உச்சத்துக்கு சென்றது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாவது மனைவியாக அவரை திருமனம் செய்துகொண்டார். அதன் பின்னர் மும்பையிலேயே செட்டில் ஆன அவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவ்வப்போது அவர் பற்றிய தகவல்கள் வெளியாகி, இன்னமும் அவரைப் புகழ் வெளிச்சத்திலேயே வைத்துள்ளன. அதில் ஒன்றாக சமீபகாலமாக ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகும் என்ற தகவல் வெளியாகி வந்தது. இதுபற்றி இப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பதிலளித்துள்ளார். அதில் “ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக்கும் எண்ணம் இல்லை” எனக் கூறியுள்ளார்.