செல்லத்த அலேக்கா தூக்கிட்டு வாங்கடா... ரூ.1 கோடி பணத்துடன் நடிகையை அணுகிய பிக்பாஸ் டீம்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (15:14 IST)
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அதைக் கணக்குப் பண்ணி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்ப்போது அம்மணி கேட்ட ரூ.கோடி பணத்துடன் பிக்பாஸ் குழு அணுகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற் கூறியுள்ளனர். இதையடுத்து ஷில்பா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக முடிவெடுத்துள்ளாராம். ஆக, இனி யாரையெல்லாம் பிக்பாஸ் டீம் அணுகுகிறதோ அவர்கள் எல்லோரும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டிமாண்ட் பண்லாம்... கேக்குற பணத்தை கொடுத்துட்டு தூக்கிட்டு போயிடுவாங்க

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்