தயாரிப்பாளர் ஆகிறார் நடிகை சமந்தா.. அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (12:53 IST)
நடிகை சமந்தா புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமந்தா. அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் தாக்கியதன் காரணமாக தற்காலிகமாக அவர் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்