அமீர்கான் மகன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகும் சாய்பல்லவி?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:20 IST)
நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கான் இப்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் ரீமேக்கில் அவரும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளான குஷி கபூரும் அறிமுகம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜூனைத் கான் நடிக்க உள்ள மற்றொரு படத்தை சுனில் பாண்டே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

அப்படி நடந்தால் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் தன்னை நிரூபித்த சாய்பல்லவி, நடிக்கும் முதல் பாலிவுட் படமாக இது அமையும். இந்த படம் பாலிவுட் ஸ்டைலிலான ஒரு முழு நீள காதல் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்