முன்னணி நடிகை நயன்தாரா சென்னை தேனாம்பேட்டையில் புதிய ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் பல ஆண்டுகளாக தமிழ் திரைப்பட உலகில் நாயகியாக திகழும் நயன்தாரா, இன்றுவரை தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். தற்போது 5க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைய்ல் நயன்தாரா ஒரு படப்பிடிப்பு ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகளுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் இதில் உள்ளதாகவும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள வீனஸ் காலனியில் உள்ள ஒரு பிரம்மாண்ட பங்களாவை ஸ்டுடியோவாக மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்டுடியோவில் அழகிய உள்தளம், கைவினைப் பொருட்கள், விசாலமான அறைகள், சிறப்பு வெளிச்ச அமைப்புகள் போன்ற அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் சிறப்பாக நடைபெற ஏற்றதாக அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பல திரைப்படங்கள் இங்கு படமாகக்கூடும் எனவும் இதனால் நயன்தாராவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.