தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வெயிலும் இருக்கும்! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

ஞாயிறு, 16 மார்ச் 2025 (14:16 IST)

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு சில பகுதிகளில் மழை பொழிவும், பல பகுதிகளில் வெப்பமும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் ஏற்கனவே பல பகுதிகளில் வெயில் சதமடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வளிமண்டல சுழற்சியால் பல மாவட்டங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ச்சியடைந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.

 

இந்நிலையில் இனி வரும் நாட்களுக்கான வானிலை தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 22ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும், தற்போதுள்ள வெப்பநிலை அளவே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்