புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா… சர்தார் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (07:50 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாகவே நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்ட பணிகள் நடக்காமல் இழுத்தடித்துகொண்டு இருந்தன.

இதையடுத்து தேவ், சர்தார் மற்றும் ரன் பேபி ரன் ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி, என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ப்ளாக் ஷீப் உள்ளிட்ட யுட்யூப் சேனல்களில் கிரியேட்டிவ் துறையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்