பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
தமிழ் திரையுலகில் ஆர்யாவின் சகோதரர் நடித்த அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதன்பின்னர் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது அவர் இன்று நேற்று நாளை 2, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் அவர்கள் நேற்று காலமானார் அவருக்கு வயது 75. இதனை அடுத்து மியா ஜார்ஜின் தந்தை மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்