தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வரும் கீர்த்தி அவ்வப்போது யோகாசனம் செய்யும் புகைப்படங்களை சமூவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் வியக்க செய்திடுவார்.
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " மனதை மைதிப்படுத்தி உங்கள் உடலை ஃப்ரீ செய்யுங்கள் என கூறி கடினமாக யோகாவை அசால்ட்டாக செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகை குஷ்பு "ஹெலோ யாரு நீங்க என்று கிண்டலாக கமெண்ட்ஸ் செய்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் " உங்களால் முடியுமா...? முடிந்தால் செய்துதான் காட்டுங்களேன் பார்ப்போம் என நக்கலடித்து வருகின்றனர்.