பாஜகவில் இணைந்த விஜய்யின் வாரிசு பட நடிகை…!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:36 IST)
ரஜினி, கமல், சிரஞ்சீவி என பலருடன் ஜோடியாக நடித்த நடிகை ஜெயசுதா இப்போது அம்மா வேடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து  வருகிறார். அரசியலிலும் செயல்பட்ட இவர் காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் தமிழில் செக்க சிவந்த வானம் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களில் ஜெயசுதா நடித்திருந்தார். சமீபத்தில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். தெலங்கானா மாநில பாஜக மாநில தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்