நடிகைகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது: இயக்குனர் சுராஜ்

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (19:21 IST)
கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ், நடிகை முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது என்றும், பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது கிளாமராக பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 

 
கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் நடிகைகள் ஆடைய பற்றிய கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆடை வடிவமைப்பாளர் முட்டி வரை மறைக்கும் உடை எடுத்து வருவார். நான் இதை எல்லம் கட் பண்ணிடு என்று சொல்வேன். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள், என்று கூறினார்.
 
இவரின் நடிகைகள் குறித்த இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்