பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா.