சாலையில் சிக்னலை கவனிக்காமல் சென்ற நடிகர் விஜய்யின் கார்

செவ்வாய், 11 ஜூலை 2023 (17:58 IST)
நடிகர் விஜய் இன்று தனது காரில் செல்லும்போது, சாலையில் இருந்த  சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

நடிகர் விஜய்  ‘விஜய் மக்கள் இயக்க’ நிர்வாகிகளை நடிகர் விஜய்  இன்று  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

அதன்படி,  இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில், இன்று மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்தச் சந்திப்பு சில மணி நேரங்கள் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டதில் கலந்து கொண்ட ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற நிர்வாகி செய்தியாளரிடம் கூறியதாவது: ‘’ சமீபத்தில் கல்வி விழாவுக்கு  ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகளை அழைத்து வந்தது நல்லபடியாக விழா நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று எங்களை வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது ‘’என்று கூறினார்.

இந்த ஆலோசனை  நிறைவடைந்த நிலையில் விஜய் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

பிரதான சாலையில் அவரது கார் சென்று கொண்டிருக்கும்போது, சிவப்பு சிக்னல் போட்டனர். ஆனால், விஜய்யின் கார் அதைக் கவனிக்காமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்