மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நிறைவு செய்தார் விஜய்!

செவ்வாய், 11 ஜூலை 2023 (17:42 IST)
நடிகர் விஜய் கல்வி விழாவை பிரமாண்டமான நடத்தி அந்த விழாவின்போது தனது கருத்துகள் கூறியது  விஜயின் அரசியல் தொடக்கம் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய்  இன்று  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி,  இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில், இன்று மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்தார்.அப்போது, உற்சாகமடைந்து, ரசிகர்கள் விஜய்யை வரவேற்றனர்.

இதையடுத்து, விஜய், மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்தச் சந்திப்பு சில மணி நேரங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நிறைவடைந்த  நிலையில் விஜய் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்