தனி நீதிபதியின் கருத்துகள் என் மனதை புண்படுத்தின! – நடிகர் விஜய் வேதனை!

திங்கள், 25 அக்டோபர் 2021 (13:00 IST)
கார் இறக்குமதி விவகாரத்தில் தனிநீதிபதிகள் பேசிய கருத்துகள் தன்னை புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் நீதிபதி தெரிவித்திருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் இறுதியாக விஜய் தரப்பில் கார் மீதான வரியை கட்ட ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் “கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கார் வாங்கினேன். கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் தனி நீதிபதி பேசிய கருத்துகள் என் மனதை புண்படுத்தின” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்