நடிகர் விஜய்யின் மகன் யுவனின் தீவிர ரசிகர்....வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (23:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தில் அவரது பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், அவர் எப்போது, நடிகர் விஜய்யின் படத்திற்கு எப்போது இசையமைக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 இ ந் நிலையில் ஒரு விழா மேடையில், யுவன் சங்கர் ராஜா ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,  ஒரு  நாள் நடிகர் விஜய்யின் #ThalapathyVijay  மகன் சஞ்சய் அவரது செல்போனில் இருந்து யுவனிஸம் என்ற டீ சர்ட் அணிந்து எனக்கு போட்டோ அனுப்பினார். அதைப் பார்த்து மகிழ்ந்து, நன்றாக உள்ளது புரோ என நான் ரிப்ளை அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து, நான் விஜய் சாரை சந்திக்கும்போது, அவர்,  என் மகன் சஞ்சய் உங்களின் தீவிர ரசிகன்…அந்த டீ சர்ட் அணிந்த புகைப்படத்தை நான் தான் உங்களுக்கு அனுப்பச் சொன்னேன் எனத் தெரிவித்தார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்