ஏழை தாயின் மகன் ரூ.12 கோடி காரில் பயணிக்கலாமா?

திங்கள், 3 ஜனவரி 2022 (16:03 IST)
பிரதமர் நரேந்திர மோடி, ஏழை தாயின் மகன் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனா கட்சி கேள்வி. 

 
பொதுவாக நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை பலரும் பயணிப்பதற்காக பிரத்யேகமாக பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.
 
முன்னதாக பிரதமர் மோடி டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸ் காரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மெர்சிடிஸ் நிறுவனத்தின் மேபெக் எஸ்650 மாடல் காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
 
இந்த வகை கார் ஏகே47 துப்பாக்கி குண்டுகளையும் துளைக்காமல் தடுக்கும் வலிமை கொண்டது. மேலும் விபத்து ஏற்பட்டால் பெட்ரோல் டேங்க் தானாக மூடிக்கொள்ளும் வசதி, வாயு தாக்குதல் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவி என பல வசதிகளுடன் கூடிய இந்த காரின் விலை ரூ.12 கோடியாகும்.
 
இந்நிலையில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
 
மேலும் தன்னை சாமானியன் என்றும் ஏழை தாயின் மகன் என்றும் கூறி விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதுபோன்ற காரில் பயணிக்கலாமா? நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தியதாகவும், எப்பேர்ப்பட்ட அச்சுறுத்தலின் போதும் அவர் தனது காரை மாற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்