சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, இந்த படத்தில் இணைந்துள்ளதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
லப்பர் பந்து திரைப்படத்தில் யசோதை என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்த சுவாசிகாவுக்கு பாசிட்டிவ் வசனங்கள் கிடைத்த நிலையில், தற்போது சூர்யா 45 திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் இணைந்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 30 ஆண்டுகளாக மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரன்ஸ் மற்றும் சுவாசிகாவை அடுத்து இன்னும் யார் யாரெல்லாம் சூர்யா 45 திரைப்படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.