பாடகராக சென்சுரி அடித்த நடிகர் சிம்பு

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:51 IST)
தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகர் சிம்பு நடிப்பு தவிர இயக்கம், பாடல்கள் பாடுவது என பன்முக திறமை வளர்த்து கொண்டவர். நடிகர் சந்தானம் நடுத்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தில் மூலம் இசையமைப்பாளர்  அவதாரமும் எடுத்துள்ளார் சிம்பு.

 
இந்நிலையில் ஒரு பாடகராக ‘சென்சுரி’ அடித்துள்ளார் சிம்பு. அவர் 100 பாடல்கள் பாடியுள்ளார். அவரது 100வது பாடல் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் இடம்பெறுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஜெகன்நாத் கூறும்போது, சிம்பு பாடலை  வாசித்து பார்த்து "இதென்னங்க செருப்பு செருப்புன்னு கூவி விற்கிற மாதிரி இருக்கு" என்று கூறி பாட மறுத்து விட்டார். அதன்  பிறகு மெட்டுடன் டம்பியாக பாடி அவருக்கு காண்பித்தவுடன் அவருக்கு பிடித்து விட்டது உடனே பாடிக் கொடுத்தார்.
 
இது பற்றி நடிகர் சிம்பு கூறுகையில், 100 என்பது சாதாரண ஒரு நம்பர்தான். ஆனாலும் இந்த நேரத்தில் பபெருமையாக  உணர்கிறேன். நான் பாடிய பாடல்களில் பல சூப்பர் ஹிட்டானதில் மகிழ்ச்சி. சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள்  ஆகியோருக்கு என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
 
இதனால் சிம்பு 100 பாடல்கள் பாடி முடித்துள்ளதை ட்விட்டரில் பெருமையாக கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்