மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த செந்தில்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (12:45 IST)
காமெடி நடிகர் செந்தில், மறுபடியும் பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.



 
கவுண்டமணி – செந்தில் காமெடியை இப்போது பார்த்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். எல்லா தலைமுறைக்குமான நகைச்சுவையை அவர்கள் படங்களில் வெளிப்படுத்தினர். சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த செந்தில், விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். அந்தப் படத்தில், சூர்யாவின் உதவியாளராக நடித்துள்ளார் செந்தில்.

தொடர்ந்து, ‘மெட்ரோ’ சிரிஷ் நடித்துவரும் ‘பிஸ்தா’ படத்திலும் இணைந்துள்ளார் செந்தில். ரமேஷ் பரத் இயக்கிவரும் இந்தப் படத்தில், சிரிஷுடன் சேர்ந்து ஏகப்பட்ட காட்சிகளில் இடம்பெறுகிறாராம் செந்தில். அதுமட்டுமல்ல, அஜ்மல் அமீர், அருந்ததி நாயர் நடிக்கும் ‘ஜூலை 16’ என்ற ஹாரர் படத்திலும் நடிக்கிறார். இன்னும் ஏகப்பட்ட படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செந்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்