நடிகர் ராஜ்கிரண் வீட்டுக்கு சென்று மிரட்டிய மர்ம நபர்கள்- போலீஸில் புகார்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:50 IST)
நடிகர் ராஜ்கிரண் வீட்டுக்கு சென்று சில மர்மநபர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அவர் முகநூலில், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீட்டுக்கு சென்ற சிலர் ராஜ்கிரணின் மனைவி கதீஜாவிடம் அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும், ராஜ்கிரணைப் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்கள் யார் என்று கேட்டபோது மாற்றி மாற்றி பதில் சொல்லியுள்ளார்கள்.

பின்னர் அங்கு “நீங்கள் ஒரு இந்து விரோதி என்றும் முஸ்லீம் விரோதி” என்றும் கோஷமிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். சம்பவம் நடந்த போது ராஜ்கிரண் வீட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து ராஜ்கிரணின் மனைவி கதீஜா காவல்நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்