அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

vinoth

வெள்ளி, 28 மார்ச் 2025 (08:26 IST)
தமிழ் சினிமாவில் நடிப்புக்கான மிகப்பெரும் அடையாளமாக போற்றப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு என பலரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். சிவாஜியின் சொந்த வீடு சென்னையில் உள்ள தி.நகரில் அன்னை இல்லம் என்ற பெயரில் உள்ளது.

சிவாஜியின் பேரன் துஷ்யந்த், திரைப்பட தயாரிப்புக்காக ரூ.3.75 கோடி கடன் பெற்ற நிலையில் அது வட்டியுடன் சேர்த்து 9.39 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் வட்டியையும், கடனையும் திரும்ப செலுத்த தவறியதால் இது தொடர்பாக வழக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு இந்த ஜப்திக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் “என் அண்ணன் ராம்குமார் சம்மந்தமான நிதிப் பிரச்சனைக்கு, எனக்கு உரிமையான ‘அன்னை இல்லத்தை’ ஜப்தி செய்யக் கூடாது என உத்தரவிடவேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்