நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் 'குட் பேட் அக்லி'. இதில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பின்னணி இசை தொடர்பான புதிய தகவலை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர், "பின்னணி இசை நிறைவடைந்து விட்டது. படம் வெளியீட்டிற்கான இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.