வங்கதேச அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்ற இந்திய பெண்கள் அணி!

செவ்வாய், 11 ஜூலை 2023 (21:16 IST)
வங்கதேச அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில்  வென்ற இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசடத்திற்ல் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியின் முதல் போட்டியில்,  இந்தியா 7 விக்கெட்  வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து,  இன்று நடைபெற்ற போட்டியில்,  டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இவர்கள் உள்ளிட்ட அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.,

இதில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 95  ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  வங்கதேச பெண்கள் அணி களமிறங்கியது. ஷமிமா சுல்தானா, ஷதி ராணி தொட்ட ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களும் இதையடுத்து, களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில்,20 ஓவர் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் இந்திய அணி 8 ரன்ககள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

வரும் 13 ஆம் தேதி 3 வது டி20 போட்டி நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்