செந்தில் பாலாஜி குணமாக நடிகர் தாடிபாலாஜி பிரார்த்தனை: இன்ஸ்டாகிராமில் புகைப்படம்..!

வியாழன், 15 ஜூன் 2023 (07:23 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டும் என தமிழ் நடிகர் தாடி பாலாஜி பிரார்த்தனை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் ஜீவசமாதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டியதாகவும் அவர் விரைவில் குணமளிவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
 மேலும் இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தாடி பாலாஜி செந்தில் பாலாஜியை சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்று குறிப்பிடத்தக்கது. 
 
செந்தில் பாலாஜி கைது குறித்து தமிழ் திரை உலக நடிகர்கள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கும் நிலையில் நடிகர் தாடி பாலாஜி மட்டும் அவர் குணமடைய வேண்டியதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்