ஒரு வருஷமா தாய்ப்பால் தருகிறேன்... நடிகர் நகுல் போட்டோ ஷூட்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:36 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுலுக்கு அகிரா என்ற மகள் பிறந்தாள்.  அண்மையில் தான் மகளின் பிறந்தநாள் கொண்டாடினர். 
 
இந்நிலையில் உலகப் பாலூட்டும் வாரத்தை முன்னிட்டு நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி நகுல் மகளுக்கு பாலூட்டியபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதை இன்ஸ்டாவில் வெளியிட்டு, அகிராவுக்கு ஒரு வருடம் ஆனதால், நான் அவளுக்கு ஒரு வருடம் முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுப்பது பற்றி இந்த ஒரு வருடம் எனக்குக் கற்றுக்கொடுத்த சில விஷயங்கள் இங்கே உள்ளன என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்