காதலர் தின ரிலீஸில் இருந்து பின்வாங்கும் கவினின் ஸ்டார் திரைப்படம்!

vinoth

செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:27 IST)
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் இந்த படம் மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. அதன் பின்னர்தான் கவினை வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இளன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்