சிஸ்டம் சரியில்லை என்று சொன்னால் போதுமா? களத்திற்கு வாருங்கள்: கமலுக்கு கருணாஸ் அறிவுரை

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (01:03 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் கமலும் மாறி மாறி கூறி வருகின்றனர். ரஜினி விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமலும் வேறு வழியின்றி அரசியலில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது.



 
 
இந்த நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் எம்.எல்.ஏவுமான் கருணாஸ் கூறியபோது, 'நடிகர் கமலஹாசன் மீது தொடர்ந்து நன்மதிப்புகளை வைத்துள்ளேன். சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது, களத்திற்கு வந்து போராட வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் உண்டு என்று கூறினார்.
 
மேலும் ஜிஎஸ்டி பிரச்சனையால் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓடும் நிலை உள்ளதாகவும், அனைத்து சிறுபடங்களும் வெளிவர முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்