நடிகரான வசந்தபாலன்

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (12:45 IST)
இயக்குனராக தோல்வி அடைந்த இயக்குனர்கள் பலருக்கும் நடிப்புதான் வாழ்வளிக்கிறது. அந்தவகையில் இயக்குனர் வசந்தபாலனும் நடிகராகியிருக்கிறார்.


 
 
வசந்தபாலனின் முதல் படம் ஆல்பம் தோல்வி. இரண்டாவது படம் வெயில் வெற்றி பெற்றதுடன் பெயரையும் சம்பாதித்து தந்தது. அதன் பிறகு வந்த அங்காடித்தெரு சரியாகப் போகவில்லை என்றாலும் வெயில் சம்பாதித்து தந்த பெயரை தக்க வைத்துக் கொண்டது.
 
அதன் பிறகு வசந்தபாலன் எடுத்த அரவான் தோல்வியடைந்தது. கடைசியாக வெளியான காவியத்தலைவன் அட்டர் ப்ளாப். அதனால், அடுத்த படம் எது என்பதில் குழம்பி நிற்கிறார் வசந்தபாலன். சென்னை வெள்ளத்தை மையப்படுத்தி படம் எடுக்கப் போவதாக அவர் சொன்னது, சொல் பேச்சிலேயே நிற்கிறது.
 
இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கிவரும் கடுகு படத்தில் முக்கியமான வேடத்தில் வசந்தபாலன் நடித்து வருகிறார். கடுகு படத்தில் ராஜகுமாரன் நாயகனாகவும், பரத் வில்லனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்