பாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (11:40 IST)
நடிகர் ஆர்யாவுக்கு 37 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண் தேடுவதாக கூறி பின்னர் ரசிகர்களை ஏமாற்றினார் ஆர்யா
 
இந்த நிலையில் ஆர்யாவின் சகோதரர் சத்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் 'அமரகாவியம்' உள்பட ஒருசில படங்களில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் சத்யாவும் துபாயை சேர்ந்த பாவனா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவீட்டார்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து வரும் 22ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் ஆர்யாவுக்கு திரையுலகில் நண்பர்கள் கூட்டம் அதிகம் என்பதால் இந்த திருமணத்திற்கு முன்னணி நடிகைகள் உள்பட பலர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்