அவர் படமா எனப் பயந்து ஓடிய நடிகைகள்… காரணம் இதுதானாம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:13 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் மறுத்துள்ளனராம்.

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்காக கதாநாயகிகள் தேடும் படலம் மும்முரமாக நடந்த வந்த நிலையில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படத்துக்காக பல முன்னணி கதாநாயகிகள் அதுவும் ஹரி படத்தில் ஏற்கனவே நடித்தவர்களிடம் எல்லாம் பேசிப்பார்த்தும் அவர்கள் சம்மதிக்கவில்லையாம். அதற்குக் காரணம் ஹரி படம் என்றால் மிகவும் ஸ்ட்ரிக்டாக ஷூட்டிங் நடக்கும். சாப்பாடு விஷயத்தில் கூட அவர் தலையிடுவார் என்று நடிகைகள் அஞ்சிதான் வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்