இசையமைப்பாளராக தீவிரமாக இயங்கி வந்த ஜி வி பிரகாஷ் நடிப்பு ஆசை வந்து நடிக்க சென்றதால் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் நடிப்பிலும் அவரால் பிரகாசிக்க முடியாததால் மீண்டும் இசைப்பணிக்கு திரும்பினார். அவர் இசையமைத்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.