விஜய்யை பெரிய நடிகராக்கியது அபிராமி ராமநாதனா? இணையதளத்தில் வைரல்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (23:30 IST)
கடந்த சில நாட்களாகவே விஜய் மீது அபிராமி ராமநாதன் அவர்களுக்கு அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. ஏற்கனவே மெர்சல் படம் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏறபடுத்திய நிலையில் நேற்று ஆடியோ விழா ஒன்றில் விஜய்யை பெரிய நடிகராக்கியதே எங்களை போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் தான் என்று கூறியுள்ளார்

நேற்று நடந்த 'ஆறாம் திணை' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அபிராமி ராமநாதன், 'விஜய்யும் ஒரு காலத்தில் சின்ன நடிகர் தான். அவருடைய படங்களை நாங்கள் திரையரங்குகளில் போட்டு, வெற்றிகரமாக ஓட்டியதால் தான் இன்று அவர் பெரிய நடிகராக உள்ளார். விஜய் மட்டுமின்றி இன்று இருக்கும் எல்லா பெரிய நடிகர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார்

அபிராமி ராமநாதன் பேசியதில் ஒருசில வரிகளை மட்டும் எடுத்து விஜய்க்கு எதிரானவர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நடிகரை பெரிய நடிகராக்கியதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு உண்டு என்றாலும், அவர்களால் மட்டுமே ஒரு நடிகர் பெரிய நடிகராக முடியாது என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்