வெங்கட்பிரபு இயக்கத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்

ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (11:35 IST)
விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோரை வைத்து வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்குவார் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.

 
விஜயகாந்த் அரசியலில் களமிறங்கிய பின் சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து அவரது இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. தற்போது முத்தையா இயக்கத்தில் மதுரவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்த் மனைவி ரசிகர்கள் உற்சாகமான செய்தியை கொடுத்துள்ளார். விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் இருவரையும் வைத்து வெங்கட்பிரபு விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்