ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.
சமீபநாட்களாக செம கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வித விதமான புகைப்படங்களை சாமுவலைத்தங்கள் முழுக்க பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஏற்றது வருகிறார். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் உடை எடையை குறைய வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்ய ஆரம்பித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் செமி மாடர்ன் உடையில் கியூட் போட்டோ ஒன்றை வெளியிட்ட ஆத்மிகா நடிகை சமந்தாவிற்கு தங்கச்சி மாதிரியே இருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.