என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

Prasanth Karthick

வியாழன், 15 மே 2025 (14:34 IST)

நடிகர் மோகன் ரவி குறித்து சமீபத்தில் அவரது மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கையை மோகன் ரவி வெளியிட்டுள்ளார்.

 

நடிகர் மோகன் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு மோகன் ரவி, கெனிஷாவோடு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இதுகுறித்து ஆர்த்தி அப்போது வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மௌனம் கலைத்த மோகன் ரவி, முதலும் கடைசியுமாக ஒரு அறிக்கை வெளியிடுவதாக கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர் “எனது முன்னாள் மனைவியை மட்டுமே விலக முடிவு செய்தேன். எனது குழந்தைகளை அல்ல. எனது குழந்தைகள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி. அவர்களுக்காகதான் அனைத்தும் செய்கிறேன். சில நாட்களாக எனக்கிருக்கும் வருத்தம், 16 ஆண்டு கால துயரமான வாழ்க்கையை விட பெரிதல்ல. கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்குக் கூட அனுப்ப மறுக்கப்பட்டேன். இத்தனை நாட்களாக அமைதியாக பொறுமையாக இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்