ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (10:28 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பிரத்விராஜ். இவர் நடிகர், இயக்குனர் எனப் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார். இவர்,தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில், ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரதிவிராஜ்  ஆடு மேய்ப்பவர் வேடத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் முடிந்தும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

இந்நிலையில் ஆடுஜீவிதம் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இப்போது மார்ச் 28 ஆம் தேதியே முன்கூட்டியே இந்த திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்