அஜித் நடித்த துணிவு திரைப்படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு வெளிநாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களால் பாஸிட்டிவ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் படம் பார்க்க வந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை சூழ்ந்துகொண்ட அஜித் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு முரட்டு ரசிகர் “சார், நான் படிச்சவன்தான் சார், IT துறையில் வேலை பார்க்கிறேன். தல கிட்ட அவர தலன்னு மட்டும் கூப்ட்டுக்கிறோம்னு சொல்லுங்க சார். அம்மாவ அம்மான்னுதான கூப்புடனும்” என கோரிக்கை வைத்துள்ளார். அஜித்தே தன்னை எந்த பட்டமும் சொல்லி கூப்பிட வேண்டாம் என சொன்னாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள் போலிருக்கிறதே.