பிரபல நடிகை வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு: சென்னை போலீசார் விசாரணை!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (10:47 IST)
பிரபல நடிகை வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அடுத்து சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
தமிழ் மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நிலையில் அவரது வீட்டில் ரூபாய் 6 லட்சம் ரூபாய் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் திருடப்பட்டுள்ளன
 
அதுமட்டுமின்றி ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
 
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்