நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை: அவரே அளித்த தகவல்!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (11:00 IST)
நடிகை குஷ்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார் 
 
நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் 
 
மேலும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் தற்போது தான் தனது பணிகளை தொடங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 ஆனால் அதே நேரத்தில் அவருக்கு என்ன விதமான அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்