ஏ.ஆர்.ரஹ்மானின் 25வது வருட இசைப்பயணம்: லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (06:00 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 'ரோஜா' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இந்நிலையில் திரையுலகில் 25 வருடங்கள் இசையமைத்ததை அடுத்து லண்டனில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டுள்ளார்.





'நேற்று இன்று நாளை' என்ற பெயரை கொண்ட இந்த இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரஹ்மான் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை ஒன்றில் கூறியபோது, 'கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம்தருகிறது' என்று கூறியுள்ளார். மேலும் ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

பென்னி தயால், நீதி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்