மிரட்டல் படத்தில் அஜித் நடித்தக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்… ஏ ஆர் முருகதாஸ் சிலிர்ப்பு!

vinoth

புதன், 20 ஆகஸ்ட் 2025 (14:21 IST)
ஷங்கருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குனராக உருவாகி வந்தார் முருகதாஸ். ஆனால் தர்பார், சிக்கந்தர் என அவரது அடுத்தடுத்த படங்கள் படுதோல்வி அடைந்து அவருக்கு ஒரு சிறு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி ஒரு நேர்காணலில் தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிக் கைவிடப்பட்ட ‘மிரட்டல்’ திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் “மிரட்டல் படத்தில் சஞ்சய் ராமசாமியாக அஜித் சார் இரண்டு நாட்கள் நடித்தார். அந்தக் காட்சிகள் இன்றும் என்னிடம் உள்ளன. அதைப் பார்த்தால் இப்போதும் பிரம்மிப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். மிரட்டல் படத்தில் இருந்து அஜித் வெளியேறியதும் அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து ‘கஜினி’ என்று பெயர் மாற்றப்பட்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்