முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படமும்ம் படுதோல்வியாக அமைந்தது. இதனால் அவர் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதராஸி படம் பற்றிப் பேசும்போது “ஏழு வருடங்களுக்கு முன்னர் ஷாருக் கானுக்காக நான் சொன்ன கதைதான் மதராஸி. அவரும் கதை கேட்டு சம்மதம் சொன்னார். ஆனால் அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தாமதமாகிக் கொண்டே இருந்தது. பின்னர் சிவகார்த்திகேயன் வந்ததும் நான் கதையில் சில மாற்றங்கள் செய்தேன்.” எனக் கூறியுள்ளார்.