அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது. "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களாக வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் பொறுப்பேற்கும் நாளில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.