விவாகரத்தான ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல தொகுப்பாளினி

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:44 IST)
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியானியாக இருந்து புகழ்பெற்ற நடிகை பூஜா, தமக்கு விவாகரத்தான ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகியுள்ளார்.
தனது கேரியரை தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக துவங்கிய பூஜா தனது தனித்திறமையால் மிகவும் பிரபலமடைந்தார். அவர் களம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பூஜா அதே சேனலில் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்தனர்.


இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக வேகமாக செய்திகள் வெளியானது. அதற்கேற்றாற்போல அவர் தனது காதலனுடன் நெருக்கமான எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்