எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்!

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:22 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி சண்டை மற்றும் கூச்சல்கள் அதிகரித்து வருகிறது . அதிலும் மஹத் டென்ஷனாகி சக போட்டியாளர்களை சத்தம் போடுவது பார்வையாளர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி ஏற்படுத்துகிறது.



தற்போது உத்தம வில்லன்கள் டாஸ்க் முடிந்துவிட்டது.  அத்துடன் புது போட்டியாளராக Wild Card ல் சென்னை 28 விஜய லட்சுமி வந்துள்ளார்.

மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. மேலும் இதில் 4 பேர் டாஸ்கை சரியாக செய்யாததால் 200 புள்ளிகள் வீதம் மொத்தம் 800 புள்ளிகள் குறைக்கப்பட்டது. அத்துடன் ரித்விகா, ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்