விஜய் சேதுபதிக்கு எழுதிய கதையில் கார்த்தி- 96 பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:52 IST)
கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது படுதோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்து கதை சொன்னார் பிரேம்குமார். அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தற்போது ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அதே கதையை கார்த்தியை நடிக்க வைத்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்